இலக்கையும் தாண்டி செல்லும் மதுவரி திணைக்கள வருமானம் : மூன்றாவது வருமானம் ஈட்டும் துறையாக நகர்வு - News View

About Us

About Us

Breaking

Sunday, April 6, 2025

இலக்கையும் தாண்டி செல்லும் மதுவரி திணைக்கள வருமானம் : மூன்றாவது வருமானம் ஈட்டும் துறையாக நகர்வு

இலங்கையின் மூன்று முக்கிய வருமானம் ஈட்டும் துறைகளில் ஒன்றான இலங்கை மதுவரித் திணைக்களம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 61 பில்லியன் ரூபாய்களை வருமானமாக ஈட்டியுள்ளது.

அதன்படி, நிதி அமைச்சகத்தின் கீழ் செயற்படும் உள்நாட்டு வருமான வரி, இலங்கை சுங்கத் திணைக்களம் என்பவற்றையடுத்து, மூன்றாவது வருமானம் ஈட்டும் துறையாக மதுவரித் திணைக்களம் பட்டியலுக்குள் வந்துள்ளது. 

இந்த நிலையில், அந்த திணைக்களத்திற்கு 2025 ஆம் ஆண்டில் 242 பில்லியன் ரூபாய் வருமான இலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கிலிருந்து 2025 ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாடு தழுவிய மதுபான விற்பனையிலிருந்து திணைக்களம் 61.3 பில்லியன் ரூபாய்களை ஈட்டியுள்ளது.

2025 காலாண்டுக்கான இலக்காக 42 பில்லியன்களே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளபோதும், அதனையும் முந்தி 61 பில்லியன் ரூபாய்கள் வரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இது 127 வீத முன்னேற்றம் என்று திணைக்களத்தின் தலைவர் ஏ.எல் உதயகுமார தெரிவித்துள்ளார். 

மதுபான போத்தல் மூடிகளில் பாதுகாப்பு ஸ்டிக்கரை அறிமுகப்படுத்த எடுத்த நடவடிக்கைகள், சட்டவிரோத மதுபானங்கள் சந்தைக்குள் நுழைவதைத் தடுத்துள்ளன. இதுவே வருமானத்தை அதிகரிக்க பெரிதும் உதவியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment