ஆசிரியர்களினால் நடத்தப்படும் மேலதிக வகுப்புக்கள் மூலம் ஆண்டுதோறும் 21,000 கோடி ரூபா (210 பில்லியன்) வருமானம் ஈட்டப்படுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் முதுகலை துறையின் பணிப்பாளரும் பொருளாதாரத்துறை பேராசிரியருமான வசந்த அதுகோரல தெரிவித்தார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டதாக தெரிவித்த அவர், நகர்ப்புறங்களில் நடத்தப்படும் தனிநபர் அல்லது சிறிய குழுக்களினால் அறவிடப்படும் வகுப்புக் கட்டணங்கள் இதில் உள்ளடங்கவில்லையெனவும் குறிப்பிட்டார்.
தரம் 3 முதல் தரம் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக நடத்தப்படும் மேலதிக வகுப்புக்கள் மூலம் ஆசிரியர்கள் 3,500 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர்.
இதேபோன்று, க.பொ.த சாதாரண தர மாணவர்களிடமிருந்து மேலதிக வகுப்புக்கள் ஊடாக 9,400 கோடி ரூபாய் பெறப்படுகிறது. க.பொ.த உயர்தர மாணவர்களிடமிருந்து 8,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது.
சில மேலதிக வகுப்புக்கள் நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பிக்கப்படுகிறது. இதனால், சில மாணவர்களின் மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாகவும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் முதுகலை துறையின் பணிப்பாளரும் பொருளாதாரத்துறை பேராசிரியருமான வசந்த அதுகோரல மேலும் தெரிவித்தார்.
https://vaaramanjari.lk
No comments:
Post a Comment