தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து - News View

About Us

About Us

Breaking

Sunday, April 6, 2025

தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் இன்று (06) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக அனைத்து தபால் ஊழியர்களுக்கும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இன்று (06) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் (Department of Posts) தெரிவித்துள்ளது.

அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடையும் வரை தபால் ஊழியர்களின் விடுமுறைகளை இரத்து செய்துள்ளதாக அஞ்சல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாலேயே விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்க அச்சக திணைக்களத்தின் (Department of Government Printing) அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் கடந்த 24 ஆம் திகதி முதல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment