போலி உத்தியோகபூர்வ இறப்பர் முத்திரைகளை தயாரித்து வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (25), பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ருக்மல் வத்த பகுதியில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
பாணந்துறை, வாழைத்தோட்டம், பரத்த பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான சந்தேகநபர், போலி இறப்பர் முத்திரைகளை தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து பாணந்துறை, பண்டாரகம, தெஹிவளை-கல்கிஸ்ஸை மாநகர சபைகள் பயன்படுத்துகின்ற போலியாக தயாரிக்கப்பட்ட 5 உத்தியோகபூர்வ இறப்பர் முத்திரைகள் மற்றும் நில அளவைத் திணைக்களத்துக்குக்குரிய ஒரு இறப்பர் முத்திரை ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த இறப்பர் முத்திரைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட பல்வேறு போலி ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment