தரமற்ற உர இறக்குமதி : கைதான அதிகாரிக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Monday, April 28, 2025

தரமற்ற உர இறக்குமதி : கைதான அதிகாரிக்கு விளக்கமறியல்

2021 ஆம் ஆண்டு சீனாவிலிந்து தரமற்ற சேதன உரம் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட விவசாய அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மஹேஷ் லசந்த கம்மம்பிலவிற்கு மே மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

அவர் தற்போது ஊவா மாகாண செயலாளராக பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றையதினம் (28) கொழும்பு நீதவான் நீதிமன்றம் இவ்வத்தரவை விடுத்துள்ளது.

குறித்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

2021 ஆம் ஆண்டு சீனாவின் Qingdao Seawin Biotech எனும் நிறுவனத்திடமிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த தரமற்ற சேத உரம் தொடர்பான இடைநிறுத்தப்பட்ட கடன் கடிதத்தை (LC) மீள திறக்க நடவடிக்கை எடுத்ததன் மூலம், உரத் தொகையின் 75%, பணமான, சுமார் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டி ஏற்பட்டதால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அதற்கமைய, குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment