அநியாயங்களை கண்டு தூண்டப்படாது முஸ்லிம் இளைஞர்கள் உணர்வுகளை நிர்வகிக்க வேண்டும் - அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் - News View

About Us

Add+Banner

Breaking

  

Thursday, April 10, 2025

demo-image

அநியாயங்களை கண்டு தூண்டப்படாது முஸ்லிம் இளைஞர்கள் உணர்வுகளை நிர்வகிக்க வேண்டும் - அஷ்ஷெய்க் அர்கம் நூராமித்

4-1%20(Custom)
அநி­யா­யங்கள் இடம்­பெ­று­வதை கண்டு உணர்ச்­சி­வ­சப்­ப­டு­வது மனித இயல்­புதான். ஆனாலும், அதனை புத்­தியின் மூலமும், இஸ்லாமிய வழி­யிலும் நிர்­வ­கிக்க முஸ்லிம் இளை­ஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் வலியுறுத்­தி­யுள்ளார். 

கடந்த வாரம் இடம்­பெற்ற ஜும்ஆப் பிர­சங்­க­மொன்றில் உரையாற்றும்­போதே, அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், சூடானில் இரு தரப்பு உள்­நாட்டு யுத்தத்­தினால் 3 இலட்­சத்­துக்கு அதி­க­மானோர் கொல்லப்பட்டிருக்கின்­றனர். 

இரா­ணு­வமும் இன்­னொரு சாராரும் யுத்­தத்தில் ஈடு­ப­டும்­ வி­ட­யத்தில் மிகக் கவ­லை­யான விடயம் என்னவெனில், ஒரு தரப்­புக்கு முஸ்லிம் நாடொன்றே ஆயு­தங்­களை வழங்­கு­கின்­றது. இந்த விட­யத்தை நாம் கண்­டு­கொள்­வதே இல்லை. அத்­தோடு, இது பெரும்­பா­லா­னோ­ருக்கு தெரி­யாத விட­ய­மாக உள்­ளது.

சிரி­யாவில் பல வரு­டங்­க­ளாக நடக்கும் யுத்­தத்தில் இலட்சக்கணக்கானோர் பலி­யா­கி­யுள்­ளனர். பல நக­ரங்கள் அழிக்கப்பட்­டுள்­ளன. அங்கு யூதர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக யுத்தம் செய்­ய­வில்லை, உள்­நாட்­டுக்குள் இரு தரப்­பாக பிரிந்து மோதிக்­ கொள்­கின்­றனர்.

உல­கத்தில் இன்று யுத்தம் அர­சி­ய­லாக மாறி­யி­ருக்­கி­றது. யார் யாருடன் இருக்­கின்­றனர். யார் யாருக்கு உதவி செய்­கின்­றனர் என்பது யாருக்கும் தெரி­யாது.

இன்­றைய யுத்­தங்கள் இப்­ப­டித்தான் இருக்­கின்­றது. இதி­லி­ருந்து அல்லாஹ் எமக்கு விமோ­ச­னத்தை தர வேண்டும். இந்த அநியாயங்களுக்கு எதி­ராக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், இதில் மிகவும் ஜாக்­கி­ர­தை­யாக நடந்­து­கொள்ள வேண்டும். 

குறிப்­பாக இந்த விட­யத்தை இளை­ஞர்கள் கவ­னத்தில் எடுக்க வேண்டும். அநி­யா­யங்­களை காணும்­போது எம்மால் தாங்கிக்கொள்ள முடி­வ­தில்லை உணர்ச்சி தூண்­டப்­ப­டு­கி­றது. இதனால், ஆத்­திரம் கோபம் மேலி­டு­கி­றது. அநி­யாயம் நடக்­கும்­போது ஒரு மனி­த­னுக்கு உணர்வு தூண்­டப்­ப­டு­வ­தா­னது சாதா­ர­ணம்தான். ஆனால், அந்த உணர்­வு­களை நிர்­வ­கிக்க கற்­றுக்­கொள்ள வேண்டும்.

முத­லா­வது புத்­தி­சு­வா­தீ­ன­மாக அந்த உணர்வு நிர்­வ­கிக்­கப்­பட வேண்டும். அடுத்­த­ப­டி­யாக, இஸ்­லா­மிய கண்­ணோட்­டத்தில் அந்த உணர்வு நிர்­வ­கிக்கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது. இந்த சந்தர்ப்பத்தில் குர்­ஆனும் ஹதீஸும் என்ன சொல்­கி­றது என்று பார்க்க வேண்டும். அல்­லாஹ்வின் கட்­ட­ளை­யையும் ரசூலின் கட்டளையையும் மதித்து உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

உணர்வுகளுக்கு நாம் கட்டுப்படுவது இஸ்லாம் அல்ல, கோபம் ஆத்திரம் வருவதாயின் அதனை நாம் கட்டுப்படுத்தாது செயற்படுத்துவதானது இஸ்லாம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என அஷஷெய்க் அர்கம் நூராமித் தெரிவித்துள்ளார்.

Vidivelli

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *