90 நாட்களுக்கு இடைநிறுத்தம் : டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் விடுத்த அதிரடி உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 10, 2025

90 நாட்களுக்கு இடைநிறுத்தம் : டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் விடுத்த அதிரடி உத்தரவு

அமெரிக்காவினால் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட புதிய இறக்குமதி வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 125% வரி விதிக்கப்படுவதாக, டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அதற்கமைய சீனாவைத் தவிர, ஏனைய அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது 10% உலகளாவிய வரி விதி அமுல்படுத்தப்படுவதாக வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 02ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு புதிய வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பம் அறிவித்திருந்தார்.

இது உலகளாவிய ரீதியில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதோடு, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்தது.

ஆரம்பத்தில் சீனாவுக்கு தாங்கள் இந்நிலையில், 125% வரி விதிக்கப்படுவதாக, டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

சீனா அமெரிக்காவுக்கு விதிக்கும் 67% வரியை கருத்தில் கொண்டு 34% வரியை அமுல்படுத்துவதாக ட்ரம்ப் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த சீனா தமது நாடும் அதற்கு நிகரான வரியை அமுல்படுத்துவதாக அறிவித்திருந்த,

அதன் பின்னர் 104% வரியை சீனா மீது அமுல்படுத்துவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றையதினம் அறிவிப்பொன்றை விடுத்த சீனா தாங்கள் 84% வரியை விதிப்பதாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது சீனாவுக்கு மாத்திரம் 125% வரிசை அமுல்படுத்துவதாக அறிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், ஏனைய நாடுகளுக்கு அதிகரிக்கப்பட்ட வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment