ஶ்ரீ தலதா யாத்திரை திட்டமிட்டபடி ஏப்ரல் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள அதன் பரிபாலகரான தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல அறிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வை நீடிக்கும் எண்ணம் இல்லையென, இன்று (25) பிற்பகல் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தியவதன நிலமே இதனை தெரிவித்துள்ளார்.
புத்தரின் புனித தந்தத்தை பார்வையிடும் இந்த யாத்திரையானது, 16 வருடங்களின் பின் இடம்பெறும் நிலையில், இலட்சக் கணக்கான பௌத்த பக்தர்கள் கண்டிக்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி ஆரம்பமான இந்த மத அனுஷ்டான நிகழ்வு ஏப்ரல் 27ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 4 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், மறு அறிவித்தல் வரை அங்கு வருகை தர வேண்டாமென நேற்றையதினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திட்டமிட்டபடி ஏப்ரல் 27ஆம் திகதி குறித்த புனித தந்த காட்சிப்படுத்தலை நிறைவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment