மஹியங்கனை கெமுனுபுர சந்தியிலிருந்து மஹியங்கனை நகரத்திற்குச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று, இன்று (25) காலை 6.45 மணியளவில் மஹியங்கனை - திஸ்ஸபுர சந்தியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் 10 பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்ஸின் பிரேக்குகள் செயலிழந்ததால், சாரதியால் பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடத்தில் பாதையானது ஒரு பெரிய வளைவை கொண்டுள்ளது.
குறித்த வளைவை எடுத்திருக்காவிட்டால் பஸ்ஸானது லோக்கல்லா ஓயா நீர்த் தேக்கத்தின் வியானா கால்வாயில் கவிழ்ந்திருக்கும்.
எனவே சாரதியின் சாமர்த்தியத்தால், ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த சம்பவம் குறித்து மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment