சர்வதேச விரைவு தபால் சேவை மூலம் (Express Mail Service) சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் ரூ. 15 கோடி பெறுமதியான போதைப் பொருட்கள் கொழும்பு மத்திய தபால் நிலைய மதிப்பீட்டுப் பிரிவில் பணிபுரியும் சுங்க அதிகாரிகள் குழுவால் இன்று (23) பிற்பகல் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் 12 கிலோ கிராம் 677 கிராம் “குஷ்” மற்றும் 1 கிலோ கிராம் 852 கிராம் “ஹஷிஷ்” ஆகியவை அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
இலங்கையின் நீர்கொழும்பு, கடான, கதிர்காமம், கணேமுல்ல, மாலபே மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் உள்ள பல முகவரிகளுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயினிலிருந்து அனுப்பப்பட்ட 14 சந்தேகத்திற்கிடமான பார்சல்களை சுங்க அதிகாரிகள் ஸ்கேன் செய்ததில், 12 பார்சல்களில் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப் பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment