உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரு வாக்காளருக்கான செலவுத் தொகை அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 27, 2025

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரு வாக்காளருக்கான செலவுத் தொகை அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரூ. 74 முதல் ரூ. 160 இற்கும் இடைப்பட்ட தொகையே செலவிட முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் இடம்பெறவுள்ள 336 உள்ளுராட்சி நிறுவனங்களுக்கும் இந்தத் தொகை தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடக்கூடிய மிகக் குறைந்த தொகையான ரூ. 74, மன்னார் உள்ளூராட்சி மன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்ச தொகை லஹுகல உள்ளூராட்சி மன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதன் தொகை ரூ. 160 ஆகும்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment