உள்ளூராட்சித் தேர்தலுக்கான பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே மாதம் 06ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இன்று (27) மதியம் 12.00 மணியுடன் இந்த நடவடிக்கை நிறைவடைந்ததாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த 03 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்படட்டது.
No comments:
Post a Comment