சட்டக் கல்லூரி பரீட்சைக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டவிரோதமாக தோற்றியமை குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இரண்டு சட்டத்தரணிகளின் உதவியுடன் நாமல் ராஜபக்ஷ இப்பரீட்சைக்கு தோற்றியதாக தெரிவிக்கப்படுவதையடுத்தே, இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
பாஸ்டன்லங்கா சமூக ஊடக வலையமைப்பில் ஒளிபரப்பான நேர்காணலில், இவ்விடயங்கள் வெளியாகி உள்ளன.
லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான சிட்டிசன் பவர்” என்ற அமைப்பு இது குறித்து குற்றப் புலனாய்வுத் துறையில் (சிஐடி) முறைப்பாடு செய்துள்ளது.
இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி, இது தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளருக்கு பதில் பொலிஸ்மா அதிபர் (ஐஜிபி) அறிவுறுத்தியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.
No comments:
Post a Comment