வடக்கில் நபர் ஒருவரை கடத்தி ரூ. 8.4 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (16) சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை இன்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாகவும், அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயது நபர் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆரியக்குளம் பகுதியில் நபர் ஒருவரை கடத்திச் சென்று பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
அந்த சம்பவம் தொடர்பிலேயே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே பெண் ஒருவர் உட்பட 3 நபர்கள் அந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment