கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு ! - News View

About Us

Add+Banner

Breaking

  

Tuesday, February 18, 2025

demo-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு !

24-65e6722f90927
சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவிக்கையில், இந்த விலை அதிகரிப்பானது இன்று செவ்வாய்க்கிழமை (18) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்திற்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாவினாலும், ஷார்ட்ஈட்ஸின் விலைகள் 10 ரூபாவினாலும், தேநீரின் விலை 05 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *