நாட்டில் நிலவும் வரட்சியான வானிலையால் நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நிலவும் வரட்சியான வானிலையினால் நீர் ஆதராங்களில் நீர் மட்டம் வேகமாக குறைவடைந்து வருகிறது. அதேவேளை, பொதுமக்கள் வெப்பத்தை தணிக்க நீரை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
குறைந்தளவிலேயே நீர் இருப்பதால் அத்தியாவசியமாக குடி நீர் மற்றும் சுகாதார தேவைகளுக்கு மாத்திரம் நீர் விநியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
வாகனங்கள் கழுவுதல் மற்றும் தோட்டங்கள் அமைத்தல் போன்ற செயற்பாடுகளை குறைத்து நீரை சேமித்து அன்றாடப் பணிகளுக்கு மட்டுமே நீரை பயன்படுத்த வேண்டும்.
உயரமான பிரதேசங்களில் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு குறைந்த அழுத்தத்திலேயே நீர் விநியோகம் செய்யப்படும்.
வரட்சியான வானிலையினால் ஏற்படும் பொதுவான அசௌகரியங்களை குறைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், சுத்தமான குடிநீரை முடிந்தவரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களை அறிவுறுத்துகிறது.
மேலதிக தகவல்களுக்கு 1939 என்ற தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அவசர இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment