கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய "தைலாப்பொட்டி" நூல் வெளியீட்டு விழா - News View

About Us

About Us

Breaking

Friday, February 7, 2025

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய "தைலாப்பொட்டி" நூல் வெளியீட்டு விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய "தைலாப்பொட்டி" நூல் வெளியீட்டு விழா நாளை (8) சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அரங்காக இடம்பெறவுள்ளது.

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்விற்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாக கலந்துகொள்கிறார்.

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் ஏற்பாட்டில் நடைபெறும் இவ்விழாவுக்கு கௌரவ அதிதிகளாக சபுத்தி தவிசாளர் கலாநிதி தமீர மஞ்சு, இலங்கை நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்ட முதுமாணி எச்.ஐ.எம். ஸஹ்பி, அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் ஓய்வுநிலை அதிபர் திருமதி அ. பேரின்பராஜா, சபுத்தி பொதுச்செயலாளர் திருமதி இரோசானி கல்ஹேன ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் கலாநிதி அமரசிரி விக்கிரமரத்ன, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எம். அப்துல் ரசாக், அக்கரைப்பற்று பேஜஸ் புத்தக இல்லத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிராஜ் மசூர் மற்றும் சிரேஷ்ட எழுத்தாளர் செங்கதிரோன் ஆகியோர் நிகழ்வில் சிறப்புரையாற்றவுள்ளனர்.

2024 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் தெரிவு செய்யப்பட்ட சிறுகதை நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment