யாழ். பல்கலையில் இரு மாணவ குழுக்களுக்கிடையே மோதல் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 9, 2025

யாழ். பல்கலையில் இரு மாணவ குழுக்களுக்கிடையே மோதல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று (09) பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதன்போது 4ஆம் வருட மாணவர்களுக்கும், 3ஆம் வருட மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் காயமடைந்தார்.

காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக உள்ளக மட்டத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். விசேட நிருபர்

No comments:

Post a Comment