பெண் உள்ளிட்ட 4 பேர் பலி, 28 பேர் காயம் : பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தபோது விபத்து - News View

About Us

About Us

Breaking

Sunday, February 9, 2025

பெண் உள்ளிட்ட 4 பேர் பலி, 28 பேர் காயம் : பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தபோது விபத்து

குருணாகல் - தோரயாய பகுதியில் இன்று திங்கட்கிழமை (10) இடம்பெற்ற பஸ் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தபோது, பின்னால் வந்த மற்றொரு தனியார் பஸ் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸின் பின்புறத்தில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 28 பேர் சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சிகிச்சை பலனின்றி மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், பின்னால் வந்த பஸ் அதிவேகமாக பயணித்ததால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, தொரடியாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment