அமீரகம் பயணமானார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Sunday, February 9, 2025

அமீரகம் பயணமானார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

2025 உலக அரச மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (10) ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி பயணமானார். 

இன்று திங்கட்கிழமை (10) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றையதினம் காலை 10.10 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவையின் E.K - 651 விமானத்தின் மூலம் துபாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வலுச்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி உட்பட 13 அதிகாரிகள் துபாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment