முப்படைகளில் இருந்து தப்பியோடிய அனைத்து வீரர்களையும் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கம்போதே பாதுகாப்புச் செயலாளர் இதனை தெரிவித்தார்.
பெரும்பாலான குற்றங்களுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற இராணுவ வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிப்பதாகவும், இது குறித்து பாதுகாப்பு அமைச்சு எவ்வாறான நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அண்யில் இடம்பெற்ற சம்பங்கள் குறித்து தாங்கள் கவனம் செலுத்தியுள்ளதாகவும். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பல இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.
குறிப்பாக தங்களது முழு சேவைக் காலத்தையும் முடிப்பதற்கு முன்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறிய இராணுவ வீரர்கள் பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ள அதிக சம்பங்கள் பதிவாகியுள்ளமை விசாரணையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அத்தகையவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க சில நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஆயுதப் பயிற்சி பெற்று ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் போன்ற குறுகிய காலத்திற்குள் வெளியேறுபவர்கள், பாதாள உலகத்துடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளமை நிகழ்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அவ்வாறு தப்பிச் செல்பவர்களைக் கைது செய்ய இராணுவ பொலிசாருக்கு வசதிகளை வழங்கியுள்ளதாக அவர் இங்கு குறிப்பிட்டார்.
கணிசமான எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் சேவையை விட்டு வெளியேறியுள்ளதாகவும், இது ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.
தற்போது பாதாள உலக நடவடிக்கைகளுக்கு எவ்விதமான அரசியல் பாதுகாப்பும் இல்லை எனக் பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசாங்க துப்பாக்கிகள் தொடர்பான கணக்காய்வு முன்னெடுக்கப்பட்டு, கணிசமான அளவு பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் இங்கும் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment