தப்பிச் சென்ற பெண்ணின் மேலும் பல புகைப்படங்கள் வெளியீடு : பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Monday, February 24, 2025

தப்பிச் சென்ற பெண்ணின் மேலும் பல புகைப்படங்கள் வெளியீடு : பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் (இலக்கம் 05) திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, கனேமுல்ல சஞ்சீவ எனும் சஞ்சீவ குமார சமரரத்ன என்பவம் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்படும் பெண் சந்தேகநபரை அடையாளம் காண மேலும் பல புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபருக்கு உதவி, ஒத்தாசை வழங்கியதாக தெரிவிக்கப்பம் நீர்கொழும்பு, ஜயமாவத்த, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த 25 வயதான பிம்புர தேவகே இஷாரா செவ்வந்தி எனும் குறித்த பெண் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு, பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து வெகுமதி வழங்கப்படும் என, பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய முடிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அவர் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாக்க இலங்கை பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்களில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் 071 8591727 அல்லது 071 8591735 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடரப்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஆகிய இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோண் விடுத்துள்ளனர்.

சந்தேகநபரான பெண் தொடர்பில் ஏற்கனவே பல புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டிருந்த நிலையில், சந்தேகநபரை அடையாளம் காண மேலும் சில அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment