எந்தவொரு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலும் பயன்படுத்தப்படவில்லை : மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்கிறார் அமைச்சர் அநுர - News View

About Us

About Us

Breaking

Friday, February 7, 2025

எந்தவொரு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலும் பயன்படுத்தப்படவில்லை : மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்கிறார் அமைச்சர் அநுர

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நீர் சுத்திகரிப்புக்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகை குரோமியத்தின் மூலக்கூறு அளவு 11 -14 தரத்தில் இருப்பது மேற்கொள்ளப்பட்ட 9 பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த குரோமிய தொகையை நீர் வழங்கல் சபை பொறுப்பேற்கவில்லை. ஆகவே எந்தவொரு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலும் இந்த குரோமியம் பயன்படுத்தப்படவில்லை. திருப்பி அனுப்புவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment