தொண்டமானின் நாமத்தை எவ்வளவு விமர்சித்து அரசியல் செய்ய முடியுமோ செய்யுங்கள் - ஜீவன் - News View

About Us

About Us

Breaking

Friday, February 7, 2025

தொண்டமானின் நாமத்தை எவ்வளவு விமர்சித்து அரசியல் செய்ய முடியுமோ செய்யுங்கள் - ஜீவன்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தொண்டமான் இவ்வளவு காலமாக அரசியலில் இருந்தார் என்ன செய்தார், என்றெல்லாம் கூறுகின்றனர். நாங்கள் இவ்வளவு காலம் இருந்தமையினால்தான் இந்த நாட்டில் தோட்ட மக்கள் வாழ்கின்றார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்திற்கு சுவீகரிக்க வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவினால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொண்டமான் எனும் நாமத்தை எவ்வளவு விமர்சித்து அரசியல் செய்ய முடியுமோ அதனை செய்யுங்கள். அவ்வாறு செய்து எம்மக்களுக்கு மாற்றத்தை கொண்டுவர முடியுமென்றால் அதனை கொண்டுவாருங்கள். நாங்கள் அரசியல் மேடையில் தேவையான ஒத்துழைப்பை வழங்குகின்றோம்.

No comments:

Post a Comment