இலங்கை வந்த தென்னாபிரிக்க வீரர் ஜொன்டி ரோட்ஸ் : ஒரு விசேட திட்டத்தை செயல்படுத்த வந்ததாகவும் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, February 2, 2025

இலங்கை வந்த தென்னாபிரிக்க வீரர் ஜொன்டி ரோட்ஸ் : ஒரு விசேட திட்டத்தை செயல்படுத்த வந்ததாகவும் தெரிவிப்பு

தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் 3 நாள் பயணமாக இன்று (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இன்று (03) காலை 5.25 மணிக்கு இந்தியாவின் மும்பையிலிருந்து ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் (UL-148) மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஜொன்டி ரோட்ஸ்க்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ஒரு விசேட திட்டத்தை செயல்படுத்த வந்ததாகவும், அது குறித்த விபரங்களை பின்னர் வெளியிடுவேன் என்று நம்புவதாகவும் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு ஜொன்டி ரோட்ஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment