ருஹூணு பல்கலையில் மோதல் : வைத்தியசாலையில் 6 பேர் : பீடத்திற்குள் நுழையத் தடை - News View

About Us

About Us

Breaking

Monday, October 20, 2025

ருஹூணு பல்கலையில் மோதல் : வைத்தியசாலையில் 6 பேர் : பீடத்திற்குள் நுழையத் தடை

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று (19) நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் புள்ளிகள் வழங்கப்பட்டமை தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக மோதல் வெடித்த நிலையில் அது பின்னர் தீர்க்கப்பட்டது.

இருப்பினும், இன்றையதினம் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டதால் சுமார் 6 மாணவர்கள் காயமடைந்தனர்.

No comments:

Post a Comment