அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானியும், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஜூன் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று (27) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே, வழக்கை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வெளிநாட்டில் இருந்தமை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகள் நீதி மன்றத்திற்கு கிடைக்காமை போன்ற காரணங்களைக் காட்டி இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுப்பதற்கான போதுமான தகவல்கள் கிடைத்தும், நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காகவே, இவர் மீது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சமூகம் மற்றும் மத விவகார நிலையத்தின் நிர்வாகப் பணிப்பாளர் வண. பிதா. ரோஹன் சில்வா மற்றும் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட ஒருவரின் தந்தை ஆகியோர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment