மக நெகும நிதி துஷ்பிரயோகம் : மேலும் நால்வரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 27, 2025

மக நெகும நிதி துஷ்பிரயோகம் : மேலும் நால்வரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பம்

அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறாகப் பயன்படுத்துவதற்கு உதவியதாக கூறப்படும் மக நெகும நிறுவனத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்படவுள்ளனர்.

இதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், நேற்று (27) கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலியிடம் தெரிவித்தனர். 

இம்முறைகேடு தொடர்பில் ஏற்கனவே இருவர் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவற்றுடன் தொடர்புடைய இன்னும் நால்வர் கைதாகவுள்ளனர். 

மக நெகும திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை சட்டவிரோதமாக கருங்கல் உடைப்பதற்குப் பயன்படுத்தி, கிடைத்த இலாபத்தை இந்த நால்வரும் பங்கிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தின் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட நபர், உயிரிழந்து விட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களும் நேற்று (27) சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment