தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சமர்ப்பித்திருந்த முன் பிணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தம்மைக் கைது செய்வதிலிருந்து பாதுகாப்புப் பெறும் நோக்கில், அவர் இந்த முன் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (22) மனுவை தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிட்டார்.
தென் கொரியாவில் விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைகளில், இலங்கையர்களை தொழில்களுக்கு அனுப்புவதற்காக செய்யப்பட்ட ‘E8 விசா ஒப்பந்தம்’ குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்தி வருகிறது.
இதனால் தாம், கைதாகலாம் எனக் கருதியே அவர் இந்த முன் பிணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸ் பொறுப்பதிகாரி, ஆட் கடத்தல் மற்றும் கடத்தல் தடுப்பு விசாரணை திணைக்கள பொறுப்பதிகாரி ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டே இம்மனு தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்றுமுன்தினம் (21) சென்று வாக்குமூலம் அளித்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, மனுவை விலக்கிக் கொள்வதாகக் கூறி, சட்டத்தரணி ஜனதீச ரணசிங்க நீதிமன்றத்தில் முன்வைத்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
No comments:
Post a Comment