திரிபோஷ நிறுவனத்தை அரசாங்கத்திற்கு சொந்தமானதாக தொடர்ந்து நடத்த தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 5, 2025

திரிபோஷ நிறுவனத்தை அரசாங்கத்திற்கு சொந்தமானதாக தொடர்ந்து நடத்த தீர்மானம்

கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை இந்நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைத்து, அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

திரிபோஷ நிறுவனத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் தலைமையில் நேற்று (04) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த திரிபோஷ நிறுவனத்தை அபிவிருத்தி செய்து அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு முன்னைய அரசாங்கங்கள் முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாத காரணத்தினாலேயே அதன் பலன்களை மக்களால் பெறமுடியாமல் போனதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிலையை மாற்றி மீண்டும் இந்நாட்டு மக்களின் போசாக்கு தேவைகளை வழங்கும் செயலூக்கமான நிறுவனமாக திரிபோஷாவை மாற்ற தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

திரிபோஷ நிறுவனத்தை கலைப்பதற்கு பதிலாக, நாட்டு மக்களின் முன்னேற்றம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்காக இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டு, முறையான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அரசுக்குச் சொந்தமான மேம்பட்ட நிறுவனமாக தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment