பல்கலைக்கழக உப வேந்தர்கள் மற்றும் பிரதமருக்கிடையில் சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, January 5, 2025

பல்கலைக்கழக உப வேந்தர்கள் மற்றும் பிரதமருக்கிடையில் சந்திப்பு

அரச பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (04) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.

இதன்போது பல்கலைக்கழகங்களில் காணப்படும் நிர்வாக பிரச்சினைகள், கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர் குழுவில் காணப்படும் பற்றாக்குறை, மாணவர்களின் விடுதி பிரச்சினைகள், மாணவர் நிவாரண கொடுப்பனவு செயன்முறைகளை நெறிப்படுத்தல் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் தொடர்பில் காணப்படும் பல்வேறு விடயங்கள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.

இந்த சந்திப்பில் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அனைத்து அரச பல்கலைக்கழகங்களினதும் உப வேந்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

No comments:

Post a Comment