அரசாங்க ஊழியர்களின் சம்பளமற்ற விடுமுறை : மாவட்டச் செயலாளர்களுக்கு விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ள பொது நிர்வாக அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Sunday, January 5, 2025

அரசாங்க ஊழியர்களின் சம்பளமற்ற விடுமுறை : மாவட்டச் செயலாளர்களுக்கு விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ள பொது நிர்வாக அமைச்சு

அரசாங்க ஊழியர்களின் சேவைக்காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் பணிகளில் ஈடுபடுவதற்காக சம்பளம் அற்ற விடுமுறையை பெற்றுக் கொள்வது தொடர்பில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

அதற்கிணங்க மேற்படி விடுமுறையை அங்கீகரிப்பதில் மாவட்டச் செயலாளர்கள் பின்பற்ற வேண்டிய தொடர் அறிவுறுத்தல்கள் தொடர்பில் இதில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையின்படி சம்பளமின்றி விடுமுறை வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக மேற்படி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்க உத்தியோகத்தர்கள் சிலர் 5 வருடங்களுக்கு உள்நாட்டில் விடுமுறையைப் பெற்றுக் கொண்டு விடுமுறையை இரத்துச் செய்யாமல் வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பித்த சம்பவங்களும் பதிவாகியுள்ள நிலையில் விடுமுறையை அங்கீகரிக்கும் முன்னர் அது தொடர்பில் பரிசீலிக்குமாறு பொது நிர்வாக அமைச்சு மாவட்ட செயலாளர்களுக்கு இதன் மூலம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு விடுமுறைக்கான விண்ணப்பங்களை அனுப்பும்போது முன்னர் எடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளை சரிபார்த்து, குறித்த ஆவணத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்றும் மேற்படி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment