மாவை சேனாதிராஜா காலமானார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 29, 2025

மாவை சேனாதிராஜா காலமானார்

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா காலாமானார். 

யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் உள்ள தனது வீட்டில் தவறுதலாக வீழ்ந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்றையதினம் புதன்கிழமை (29) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் இன்று இரவு காலமானார்.

தமது அரசியல் வாழ்க்கையில் தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்த அவர், பாராளுமன்றத்திலும் பாராளுமன்றிற்கு வெளியேயும் அவர்களுக்காக குரல் எழுப்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதி கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில், தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டதால் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார்.  

No comments:

Post a Comment