(டானியல் மேரி)
colors of courage நிதியம் காலி கராப்பிட்டிய புற்றுநோய் வைத்தியசாலை திட்டத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிக்கான நடை பவனி வியாழக்கிழமை (30) சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் மீள ஆரம்பமாகவுள்ளதாக colours of courage நிதியத்தின் பணிப்பாளர்கள், நாதன் சிவகணநாதன் மற்றும் மஹேல ஜயவர்தனால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் புதன்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவர்கள் இதனை தெரிவித்தனர்.
மஹரகமையில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான colours of courage அமைப்பு நாதன் சிவகணநாதன் மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரால் 2018 இல் நிறுவப்பட்டது. இதன் முதல் கட்ட நடை பயணம் ஜூலை மாதம் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் 2016 ஆம் ஆண்டு கட்டட நீர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
தவிர்க்க முடியாத காரணங்களால் இத்திட்டம் இடை நிருத்தப்பட்டது. மீண்டும் கராப்பிட்டிய ட்ரெயில் புற்றுநோய் வைத்தியசாலை திட்டத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிக்கான நடை பவனி நாளை (30) ஆரம்பமாகவுள்ளதுடன் இத்திட்டப் பணியானது 2026 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட colours of courage நிதியத்தின் பணிப்பாளர் மஹலே ஜயவர்தன கூறுகையில், colours of courage நிதியத்தின் கராப்பிடிய ட்ரெயில் புற்றுநோய் வைத்தியசாலை திட்டத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிக்கான நடைபாதை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திட்டத்தின் முதல் கட்டம் 2014 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை ட்ரெயில் புற்றுநோய் மருத்துவமனையை நிர்மாணிக்க தேவையான நிதி சுகாதார அமைச்சின் உதவியுடன் திரட்டப்பட்டது. இதன் பின்னர் காலி கராப்பிடிய புற்றுநோய் வைத்தியசாலையை நிர்ணயிக்க தீர்மானித்திருந்தோம்.
கொவிட், ஈஸ்டர் தாக்குதல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த திட்டம் இடைநிருத்தப்பட்டது. ஆனால் colours of courage நிதியானது, சிறப்பு புற்றுநோய் மருத்துவமனைக்கான இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வைத் தொடந்து புதியதை சந்திப்பதற்கான பாதையில் இருக்கும் என்பதை தெரிவித்துள்ளார்.
மேலும், இத்திட்டத்திற்கான நிதி உதவி வழங்கும் வசதிகள் இணையத்தளத்திலும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார். நிதியினால் மாத்திரம் அல்ல, மக்களின் பங்களிப்பும் அவசியம் எனவும் இதன்போது தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து colours of courage நிதியத்தின் பணிப்பாளர் நாதன் சிவகணநாதன் தெரிவிக்கையில், புற்றுநோயால் தனிப்பட்ட இழப்பை நான் சந்தித்து இருக்கிறேன். அதனாலேயே இந்த திட்டத்தை உருவாக்கி, முதலில் நாம் இதை தெல்லிப்பளையில் ஆரம்பித்தோம். அங்கு மாதத்திற்கு 4000 நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். இந்த திட்டம் வெற்றிகரமாக செல்வதை பார்த்து சந்தோசமாக இருந்தது.
தவிர்க்க முடியாத சில காரணங்களால் இத்திட்டம் இடைநிறுத்தபட்டு சில வருடங்கள் ஒத்திவைக்க வேண்டிய கட்டாயத்திற்கு பின்னர், இந்த திட்டத்தை மீண்டும் அதிகாரபூர்வமாக தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த திட்டத்திற்காக 2.2 பில்லியன் நதி தேவைப்படுகிறது. இலங்கையில் 22 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள், ஒருவர் 1000 ரூபா கொடுத்தாலே போதுமானதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், சுகாதார அமைச்சின் ஆதரவிற்கு மேலதிகமாக, தன்னார்வ தொழிநுட்ப உதவிகள் மூலம் தமது முழு ஆதரவையும் உறுதியளித்தமைக்காக பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை இராணுவத்திற்கு நன்றி செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment