ஜனநாயக ரீதியான ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பு அவசியம் : ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகளை வெளிப்படுத்துவதும் முக்கியம் - பேராயர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 7, 2025

ஜனநாயக ரீதியான ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பு அவசியம் : ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகளை வெளிப்படுத்துவதும் முக்கியம் - பேராயர்

ஜனநாயக ரீதியான ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பின் தேவை உணரப்படுவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு எதிரான ஊழல், மோசடிகளை விசாரணை செய்வதற்கு வலுவான பொறிமுறையை உருவாக்குவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கும் பேராயருக்குமிடையில் 5 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பேராயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள பேராயர்; ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான தகவல்களை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியமானது. அந்த தாக்குதல் யாரால் மேற்கொள்ளப்பட்டது? எந்த நோக்கத்திற்காக, யாருடைய ஒத்துழைப்போடு அவர்கள் அதனை மேற்கொண்டார்கள்? என்பது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இலங்கையில் கடந்த காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. கொலைகள், காணாமலாக்கப்பட்டமை போன்ற பல மோசமான சம்பவங்கள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.

ஜனநாயகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஊழல்கள் பற்றி விசாரணைகளை மேற்கொள்ளத் தேவையான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

இதற்குத் தேவையான அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போதுள்ள அரசியலமைப்பில் உள்ள சில பலவீனங்களைப் போக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment