தம்மை ஒரு பிரதிப் பொலிஸ்மா அதிபரென காண்பித்துக் கொண்டு வட்ஸ்அப் ஊடாக பண மோசடி செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள் உட்பட பலரிடம் நிதி மோசடி செய்த இச்சந்தேகநபர், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளையில் வசிக்கும் இச்சந்தேகநபர், பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரின் பெயரையும் அவரது புகைப்படத்தையும் பயன்படுத்தி பல்வேறு நபர்களுக்கு Whats App ஊடாக தகவல்களை அனுப்பி நிதி மோசடி செய்துள்ளார்.
பிரதி பொலிஸ்மா அதிபர் எனக்கூறி தொழிலதிபர்களை வட்ஸ்அப் மூலம் மிரட்டி வந்த இவ்விளைஞர், பொய் முறைப்பாடு பதிந்து சட்ட நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தி பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment