வெளிநாட்டு அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள், நாட்டில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனான அரச நிறுவனங்களுக்கும் மற்றும் அமைச்சுக்களுக்குமிடையிலான தொடர்புகள் குறித்து கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறை தொடர்பில் திருத்தப்பட்ட விசேட சுற்றறிக்கையை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது.
முன்னர் வெளியிடப்பட்ட PS/EAD/Circular/16/2022 சுற்றறிக்கைக்குப் பதிலாக, அதாவது ஜனாதிபதியின் செயலாளரால் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட சுற்றறிக்கைக்குப்பதிலாக வெளியிடப்பட்டுள்ள இந்த திருத்தப்பட்ட விசேட சுற்றறிக்கை, ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட இந்த சுற்றறிக்கை அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாகாண ஆளுநர்கள் மற்றும் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர தூதரகங்களின் பிரதானிகள் குறித்தும் இந்த அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், உயரதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளை சந்திப்பதற்காக இலங்கைக்கு வருகை தரும் பிரதிநிதிகளுக்கான சந்திப்புக்கான நியமனங்களை முன்பதிவு செய்தல் போன்றவற்றுக்கு இதற்கு முன்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் இராஜதந்திர நெறிமுறைக்கு எதிரானது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
நடைமுறைப்படி, இவ்வாறான பிரதிநிதிகளுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் குறிப்பிட்ட பிரிவுக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.
இதற்கமைவாக நாட்டிற்கு விஜயம் செய்யும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து இந்த சந்திப்புக்களுக்கான நியமனங்களுக்கு பொருத்தமான நேரத்தை வெளிவிவகார அமைச்சின் பிரிவுடன் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆளுநர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் பின்பற்ற வேண்டும்.
இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதர்கள், இராஜதந்திரத் தூதுவர்களின் பிரதானிகள் அல்லது அவர்களது தூதரக பணியாளர்கள் இலங்கை ஆளுநர்கள் அல்லது மாகாண அமைச்சர்களை சந்திப்பதற்கான நேரடி நியமனங்களுக்கான கோரிக்கைகள் குறித்த விடங்களை வெளிவிவகார அமைச்சின் குறிப்பிட்ட பிரிவுக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், நாட்டிலுள்ள இராஜதந்திர தூதுவர்கள் அல்லது கொழும்பிலுள்ள தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களின் தலைவர்கள் ஜனாதிபதி, பிரதமர் அல்லது அமைச்சர்களை சந்திக்க விரும்பும்போது, அத்தகைய சந்திப்புகள் எந்த மட்டத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் ஆலோசனை பெற வேண்டும்.
மேலும், நாட்டிலுள்ள இராஜதந்திர தூதுவர்கள் அல்லது கொழும்பிலுள்ள தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களின் பிரதானிகள் ஜனாதிபதி, பிரதமர் அல்லது அமைச்சர்களை சந்திக்க விரும்பும்போது, அத்தகைய சந்திப்புகள் எந்த மட்டத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் வெளியுறவு அமைச்சகத்திடம் ஆலோசனை நடத்தப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை உட்பட தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களில் கீழ்மட்ட பதவிகளை வகிக்கும் அதிகாரிகள், ஜனாதிபதி அல்லது பிரதமரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்யக்கூடாது என புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மற்றும் வெளிநாட்டு உறவுகள் மற்றும் வெளிநாடுகள் தொடர்பான விடயங்கள் குறித்து எந்த வகையான ஊடக அறிக்கையையும் வெளியிடக்கூடாது என திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் அமைச்சுக்கள் மற்றும் நிறுவகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment