மாவை சேனாதிராசாவின் பூதவுடல், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதி கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராசா (வயது 82) வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (29) இரவு காலமானார்.
நேற்று முன்தினம் மாவிட்டபுரத்தில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள், பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
யாழ். விசேட நிருபர்
No comments:
Post a Comment