நடுவானில் விமானத்துடன் மோதிய ஹெலிகொப்டர் ! அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் அருகே விபத்து ! மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 29, 2025

நடுவானில் விமானத்துடன் மோதிய ஹெலிகொப்டர் ! அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் அருகே விபத்து ! மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

வொஷிங்டன் DC இல் வானில் பறந்து கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று, ஹெலிகொப்டருடன் நேருக்குநேர் மோதியதாக, அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரீகன் வொஷிங்டன் தேசிய விமான நிலையத்தின் 33ஆவது ஓடுதளத்தை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி நேற்று (29) இரவு 9.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக, விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து, வொஷிங்டன் டிசியின் அவசர சேவை பிரிவினர், ரீகன் தேசிய விமான நிலையத்துக்கு திரண்டுள்ளனர். 10 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்பியூலன்ஸ் வாகனங்கள் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 5342 DC விமான நிலையத்திற்கு அருகில் பிளாக் ஹாக் ஹெலிகொப்டருடன் மோதிய விபத்தின் வீடியோவில் இரண்டு விமானங்களும் தீப்பற்றி எரியும் நிலையில் காட்சியளிக்கின்றன.

விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் 60 பயணிகள் மற்றும் 4விமான சேவை ஊழியர்களுடன் கன்சாஸில் இருந்து வாஷிங்டன் DC விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தின் விளைவாக, ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment