வீதி விபத்துக்களால் கடந்த ஐந்து வருடங்களில் 12,140 பேர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 7, 2025

வீதி விபத்துக்களால் கடந்த ஐந்து வருடங்களில் 12,140 பேர் உயிரிழப்பு

வீதி விபத்துக்களால் கடந்த ஐந்து வருடங்களில் நாட்டில் 12,140 மனித உயிர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க 2020, 2021, 2022, 2023, 2024 ஆம் ஆண்டுகளில், இடம்பெற்ற விபத்துக்கள் தொடர்பில் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பணிப்பாளர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் எச்.ஏ.கே.ஏ. இந்திக ஹபுகொட ஆகியோரின் மேற்பார்வையில் இடம்பெற்ற மதிப்பீடுகளிலே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி வீதி விபத்துக்களால் 2020 ஆம் ஆண்டில் 2,363 பேரும், 2021ஆம் ஆண்டில் 2,557 பேரும், 2022ஆம் ஆண்டில் 2,540 பேரும், 2023ஆம் ஆண்டில் 2,321 பேரும், 2024ஆம் ஆண்டில் 2,359 பேரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தவிர, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் நவம்பர் 30 வரை நடந்த பஸ் விபத்துக்கள் தொடர்பான தகவல்களும் வௌியிடப்பட்டுள்ளன.

இதன்படி, கடந்த 11 மாதங்களில் 198 பஸ் விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் அவற்றுள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 50 பஸ் விபத்துக்களும், 148 தனியார் பஸ் விபத்துக்களும் பதிவாகியுள்ளதாக மேற்படி தலைமையகம் தெரிவித்துள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment