மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான சிறந்தவொரு பொறிமுறையைக் கண்டறிவதற்காக தேசிய கொள்முதல் ஆணையக்குழுவுடன் விரைவில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இது குறித்து சுகாதர அமைச்சின் செயலாளர் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மருந்துகள் கொள்முதல் செயல்முறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
மருந்துகள் கொள்வனவுப் பிரச்சினைகள் காரணமாக கேள்வி விலை மனுக் கோரலை நிறுத்துவது பற்றாக்குறையை ஏற்படுத்தும் நிலைமைக்கு கொண்டு செல்கிறது.
மேலும் தரமான மருந்துகளை வாங்குவதை உறுதி செய்ய சிறந்த திட்டங்களும் அவசியமாக உள்ளன என்றுள்ளது.
இதேநேரம், இலங்கையின் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையானது 90 வகையான மருந்துகளின் விலைகளைக் குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், பல மருந்து விற்பனை நிறுவனங்கள் அந்த அறிவிப்புக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால் விலைக் குறைப்பு தாமதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment