ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சம்பள விபரத்தை இவ்வாறு பகிரங்கப்படுத்தியமை இதுவே முதல் தடவையாகும்.
அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாத சம்பளம் (கழிவுகள் போக) 3 இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் ஆகும்.
ஆரம்பத்தில் எனது சம்பளத்தை ஏற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை. பின்பு அதை சமூக சேவைகளுக்கு செலவிட நான் முடிவு செய்தேன். எனக்கு சம்பளம் அவசியமில்லை நான் ஒரு வர்த்தகர் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment