மாகாண மட்டத்தில் குற்றவியல் விசாரணைப் பிரிவு நிறுவப்படும் - அமைச்சர் ஆனந்த விஜபால - News View

About Us

About Us

Breaking

Monday, January 13, 2025

மாகாண மட்டத்தில் குற்றவியல் விசாரணைப் பிரிவு நிறுவப்படும் - அமைச்சர் ஆனந்த விஜபால

மாகாண மட்டத்திலான குற்றவியல் விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜபால தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளவிய ரீதியில் தற்போதுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு மேலதிகமாக, மாகாண மட்டத்திலான குற்றவியல் விசாரணைப் பிரிவுகளை நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக ஏற்கனவே தென் மாகாணத்தில் குற்றவியல் விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

இவ்வாறு குற்றவியல் விசாரணைப் பிரிவுகள் மாகாண ரீதியில் நிறுவப்படுவதற்கு காரணம், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை முறையாக விரைவு படுத்துவதே நோக்கமாகும்.

தற்போதைய நிலையில் முக்கிய சில விசாரணைகள் பொலிஸ்மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.

No comments:

Post a Comment