மருந்துகளை பரிசோதனை செய்ய ஆய்வகங்களை திறக்க திட்டம் - சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, January 13, 2025

மருந்துகளை பரிசோதனை செய்ய ஆய்வகங்களை திறக்க திட்டம் - சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

கொள்வனவு செய்யப்படும் மருந்துகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் விரைவில் பல ஆய்வகங்களை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மருந்துகளின் தரம் தொடர்பில் குறிப்பிட்ட முறைப்பாடுகளுக்கு பதிலளிப்பதை விடவும், பொதுமக்களுக்கு மருந்துகளை விநியோகம் செய்வதற்கு முன்னதாக பரிசோதனை செய்வதே மேலானது.

ஆகவே மருந்துகளை ஆய்வு செய்வதற்கான பல ஆய்வகங்களை திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

மருந்து இறக்குமதி தொடர்பாக நிறுவனமொன்றுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேநேரம், இலங்கையின் சுகாதார அமைப்பு மற்றும் மருந்து விநியோக செயல்முறைகள் விரிவானவை என்பதை அடிப்படையாகக் கொண்டு அவதானமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment