அர்ச்சுனா எம்.பி உள்ளிட்ட 9 பேரிடம் பொலிஸார் விசாரணை : வாக்குமூலம் பெற்ற பின் அறிக்கைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 22, 2025

அர்ச்சுனா எம்.பி உள்ளிட்ட 9 பேரிடம் பொலிஸார் விசாரணை : வாக்குமூலம் பெற்ற பின் அறிக்கைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை

தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட 9 பேர் மீதான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்துள்ளனர்.

அந்நிலையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய தேர்தல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதற்கமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உட்பட யாழ். தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், அ. உமாகரன், சி. மயூரன், த. கிருஸ்ணானந் ந. கௌசல்யா, குருசாமி சுரேன் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அதில் சசிகலா ரவிராஜிடம் பொலிஸார் வாக்கு மூலங்களை பெற்றுக் கொண்டுள்ளனர். ஏனையவர்களிடமும் வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை யாழ். தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்களில் இதுவரையில் தமது தேர்தல் செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்காத 35 பேருக்கு எதிராகவும் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ். விசேட நிருபர்

No comments:

Post a Comment