நகைச்சுவையாக உயிர்மாய்க்க முயற்சி ! விபரீதத்தில் முடிந்த சோக சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 7, 2025

நகைச்சுவையாக உயிர்மாய்க்க முயற்சி ! விபரீதத்தில் முடிந்த சோக சம்பவம்

வெளிநாட்டில் இருந்த கணவருடன் நகைச்சுவையாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதை போல நடிக்க முயன்ற மனைவி நிஜமாகவே உயிரிழந்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்கொட கொடல்ல மாவத்தையில் வசித்து வந்த 28 வயதுடைய அனுத்தரா சிறிமான்ன என்ற பெண்ணே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

அனுத்தராவுக்கு திருமணமாகி 3 வருடங்கள் கடந்த நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதோடு, கணவர் உதவியுடன் வீட்டின் பின்புறம் மற்றுமொரு அழகான வீட்டையும் கட்டியுள்ளார்.

புது வீட்டின் புதுமனை புகுவிழா எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 04ஆம் திகதி, குறித்த பெண் தன் கணவருக்கு வீடியோ போனை ஒன் செய்து விட்டு, தனது அறையில் உள்ள படுக்கையில் கதிரையை வைத்து, அதன் மேல் ஏறி, மேற்கூரையில் தொங்கிய கயிற்றை கழுத்தில் போட்டு, போலியாக தற்கொலை செய்ய முயன்றுள்ளார். 

அதன்போது, எதிர்பாராத விதமாக கதிரை கவிழ்ந்ததில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிராமத்தில் உள்ள அனைவரின் மனதையும் கவர்ந்த குணம் கொண்ட அனுத்தரா ஹிம்புட்டானாவில் உள்ள முன்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்ததோடு, குடும்பத்தில் 4 மகள்களில் இளையவராவார்.

குறித்த பெண்ணின் உடல் புது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதோடு, இறுதிக் கிரியைகள் நாளை (08) மாலை உடுமுல்லை மயானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment