பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதற்காக அவருக்கு ரூ. 75,000 இழப்பீடு வழங்க வேண்டுமென பிரதிவாதிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆத் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அசாத் சாலி 9 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment