ஒன்பது குடும்பங்கள் உரிமை கோரிய சுனாமி பேபிக்கு இருபது வயது - News View

About Us

About Us

Breaking

Thursday, December 26, 2024

ஒன்பது குடும்பங்கள் உரிமை கோரிய சுனாமி பேபிக்கு இருபது வயது

2004 இல் இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் இருந்து உயிர் பிழைத்து, நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு பெற்றோருடன் இணைந்த அந்த குழந்தை, தற்போது உயர் கல்விக் கனவில் உள்ள 20 வயது இளைஞனாவார்

‘பேபி 81’ என அழைக்கப்பட்ட இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேரந்த ஜெயராசா அபிலாஷ் இலங்கை வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றால் பிளவுபட்ட ஒரு குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைத்ததோடு, 2 மாத குழந்தையாக இருந்த அபிலாஷ் சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டு, தனது வீட்டிலிருந்து சிறிது தொலைவில் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில், அவரை அனுமதித்த பதிவு இலக்கம் 81 ஆக இருந்ததனால் அவருக்கு ‘பேபி 81’ என அழைக்கப்பட்டது. 

அவரது தந்தையான முருகுப்பிள்ளை ஜெயராசா தனது சிதறிய குடும்பத்தை மூன்று நாட்களாக தேடி, முதலில் தனது தாயையும், அதன் பின்னர் மனைவியையும் கண்டுபிடித்தார். ஆனால் அவர்களுக்கு அவரது குழந்தை கிடைக்கவில்லை.

மருத்துவமனையில் இருந்த ஒரு தாதியர் குழந்தையை மருத்துவமனையில் இருந்து அழைத்துச் சென்ற நிலையில், அவரது குடும்பத்தினர் உயிருடன் இருப்பதாக அறிந்ததும் குழந்தையை மீள வைத்தியசாலைக்கு வழங்கியிருந்தார். 

ஆயினும், ஒன்பது குடும்பங்கள் ‘குழந்தை 81’ தங்களுக்கு சொந்தமானது என்று கூறி தங்கள் பெயர்களை மருத்துவமனையில் சமர்ப்பித்திருந்தன. 

எனவே ஆதாரமின்றி குழந்தையை ஜெயராசா மற்றும் அவரது மனைவியிடம் ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.

அதற்கமைய, குழந்தையின் உரிமைகளை கோரும் குழுக்கள் பொலிஸ் நிலையம் செல்ல வேண்டியிருந்ததோடு, அது பின்னர் நீதிமன்றம் வரை சென்றது.

இதற்காக DNA (மரபணு) சோதனை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அது இலங்கையில் DNA பரிசோதனை ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகாலமாகும்.

அதன் பெறுபேறுக்கமைய, ஜெயராசா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவர்களது குழந்தை மீளக் கிடைத்தது.

(படங்கள் : நெத்மி பூஜனி ரத்நாயக்க)

No comments:

Post a Comment