எதிர்கால தொழில் உலகில் சவால்களை வெற்றி கொண்டு சுபீட்சமான வாழ்க்கையினை வளப்படுத்தவும், மாறிவரும் புதிய உலகில் மாற்றங்களுக்கேற்ப உங்களை தயார்படுத்தவும் இதோ உங்களுக்கோர் அறிய வாய்ப்பு. உங்கள் காலடியில் தேடிவரும் இச்சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்.
இளைஞர்களின் தொழில் விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது இளைஞர் பயிற்சி நிலையம் ஓட்டமாவடியில் கடந்த 16 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
அந்த வகையில், அண்மையில் திறந்து வைக்கப்பட்ட ஓட்டமாவடி தொழிற்பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் பாடநெருக்களுக்கான பதிவுகள் தொடங்குகின்றன.
ஓட்டமாவடி, பிரதேச சபை நூலக கட்டிடத்தில் மேற்படி அமைச்சினால் தொழிற்பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பின்வரும் பாடநெருக்களுக்கான பதிவுகள் இடம்பெறவுள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் வருகின்ற 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தொழிற்பயிற்சி நிலையக் கட்டிடத்திற்கு வருகை தந்து பதிவுகளை மேற்கொகொண்டு பாட நெறிகளை பூர்த்தி செய்து அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களுடன் உங்களுக்கான தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
01. Human Resource Management (NVQ Level)
02. ICT (NVQ Level)
03. Beautician (NVQ Level)
04. Korean Language
05. Advanced English
06. Singhala Language
07. Room Attendant
மேலதிக விபரங்களுக்கு 077 5488854 / 075 0828854 எனும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment