கடவுச்சீட்டு பெற இனிமேல் Online பதிவு அவசியம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 4, 2024

கடவுச்சீட்டு பெற இனிமேல் Online பதிவு அவசியம்

கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள Online இல் திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்யும் முறைமையை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் பி.எம்.டி. நிலூஷா பாலசூரிய தெரிவித்தார்.

இந்த இணையவழி முறைமை நாளைமறுதினம் (06) முதல் அமுலுக்கு வரும் எனவும், ஏற்கனவே வரிசைகளில் நின்றவர்களுக்கு இந்த மாதத்திற்கான திகதி, நேர ஒதுக்கீடுகள் வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, டிசம்பர் மாதத்திற்கான திகதி, நேர ஒதுக்கீடுகளை இதன் மூலம் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவசரமாக கடவுச்சீட்டை பெற வேண்டிய தேவையுடையவர்கள் அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment